யார் அந்த அவள்

பாலூட்டும் தாயும் அவள்
பாசம் வைத்த மகளும் அவள்!

தோள் சாயும் தோழி அவள்
தோற்கும் போது குருவும் அவள்!

என்னை வென்ற மங்கை அவள்
சண்டை போடும் தங்கை அவள்!

அன்னை மிஞ்சிய அக்கா அவள்
மெதினா மிஞ்சிய மெக்காவும் அவள்!

அறிவுரைகளில் அத்தை அவள் என்
முடிவுரைகளின் வித்தை அவள்!

டையப்பரும் டெட்டாலும் இல்லாத காலத்தில் அந்த
99 சதவிகித கிருமிகளிமிருந்து
எனை காத்த என் பாட்டி அவள்!

தொண்ணூறு வயதாலும்
எந்நாளும் என் பியூட்டி அவள்!

இங்கிலாந்து ராணி அவள்
சுறுசுறுப்பில் தேனீ அவள்!

இந்திய அழகி அவள்
இலங்கை அகதியும் அவள்!

கருணையிலோ தெரசா அவள்
கற்பினிலே கண்ணகி அவள்!

பாரதியின் புதுமை அவள் என்
பார்வையிலே பதுமை அவள்!

எனை ரசித்த காதலி அவள்
நான் ருசித்த முதல் தேன்த்துளி அவள்!

அவளதிகாரத்தின் நாயகி அவள்
எனக்கு மட்டும் தேவதை அவள்!

என
நான் பார்த்த
என்னை ஆவலாக பார்க்கவைத்த
அவள்களுக்கானது
இந்த அவளதிகாரம்!

Get your #அவளதிகாரம் copy now

இந்தியாவில் வாங்க,
http://www.flipkart.com/item/9788193001837

சிங்கப்பூரில் வாங்க,
http://list.qoo10.sg/item/AVALATHIKAARAM/419615613

மற்ற (இண்டர்நேஷனல்) அனைத்து நாடுகளிலும் வாங்க,
http://www.amazon.com/dp/8193001834

| FREE Home Delivery || Cash on delivery

1 Cover