வல்லரசு ஒரு கேடா!

விளைநிலங்கள் எல்லாம்
விலைநிலங்கள் ஆச்சுதடா!

பூமகள்ன்னு பேரு வச்சோம்
கைமாறி கைமாறி
விலைமகளே ஆனதால
கூச்சத்துல அப்பப்போ
குளுங்கி குமுறாளடா!

யானைகட்டி போரடுச்சேன்
இப்போ ஏறுவோட்ட
டிராக்டர் கூலிக்கே மாரடிக்கிறேனடா!

களத்துமேடு காஞ்சுபோச்சு
காளைமாட்ட வித்துபுட்டேன்
சாணியும் தான் வயலுக்கில்ல.
நான் வளத்த ஆட்டுக்குட்டியும்
யூரியாக்கு கறியாபோச்சு!

நான் உழுத பூமியும் தான் வறண்டுபோச்சு!
கிணத்து தண்ணி இறைக்கிறதுக்குள்ள
வந்த கரண்டும் நின்னுபோச்சு!
விவசாயமும் வெளுத்துபோச்சு
என் பொலம்பல் கேட்டு கேட்டு
அந்த சாமிக்கும் தான் அலுத்துபோச்சு!

எம்பாத வெடிப்புபோல
எந்நிலமும் வெடிச்சிருக்கு!

நான் விதைச்ச பயிரெல்லாம்
வாடி ஒடியதடா
வாட்டம் போக்கத்தான்
ஒரு வள்ளலாரும் இங்கில்லையே!

காணி நிலம் கேட்டவனும்
கிடைச்சிருந்த இப்போ
சோம்பு தண்ணி கேட்டிருப்பான்!

உழுதுண்டு வாழ்தவனுங்க
டாஸ்மாக்ல உண்டு விழுந்து கிடக்கிறானுங்க!

விளைச்சலை பெருக்கிடவே
தண்ணிக்கும் உரத்துக்கும்
போராடி போராடி
அலைச்சலில் அலுத்துவிட்டேன்!

நான் அறுத்த வெள்ளாமை
விதை நெல்லுக்கே ஆகலையே!
குதிரு நெறைக்கிறதுக்கு
பதறு கூட சேரலையே!
விலைக்கு வித்ததுவும்
களையெடுத்த கூலிக்கே பத்தலயே!

அக்னியும் அனுப்புறீங்க
அணு உலையும் அசராம கட்டுறீங்க
அக்னியும் அணு உலையும்
எங்க வயித்துக்குள்ள கொதிக்குதடா!

காடுகள வெட்டிபுட்டு
ரோட்டு மரத்துக்கு
நம்பர் போட்டு கணக்கு வைச்சுருக்கோம்

ஏரிகள துத்துபுட்டு
வீட்டுக்குள்ள மழை நீரை சேகரிக்கிறோம்!

மும்மாரி பெஞ்சாலும்
தேங்கி நிக்க குளங்குட்டை ஏதுமில்ல
கேப்மாரி பயலுகளுக்கு
அரசியல் செய்ய தண்ணி வேணுமே!

எலக்க்ஷனும் வந்துடுச்சு
குண்டி கழுவ கூட
இலவசமா பன்னீரும் பசும்பாலும் தருவாங்க!
தாகத்துக்கு தண்ணி குடிக்க
அம்மா மினரல் வாட்டர் பத்து ரூவா!

கொள்கையும் கூட்டணியும் வாக்குறுதியும்
வாக்கை உறுதி செய்யும் மட்டும் தான்!

கடலில் கலக்காத ஆறுகளில்
கடைசியா காவிரியும் சேர்ந்துச்சுன்னு
வரலாற்ற மறக்காம
எம்பபுள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்கனும்டா!

புரட்சி
தலைவர்களும்
தலைவிகளும்
கலைஞர்களும் ஏராளம் உண்டு.
புரட்சியை இன்னும் கடிதத்தில் மட்டும்
காட்டுவது கேவளம் இன்று!

வாய்க்கரிசிக்கூட வாங்க வக்கில்லாம இருப்பவர்களுக்கு
வல்லரசு ஒரு கேடா!

#அவளதிகாரம்

Get a copy of Book now,

இந்தியாவில் வாங்க,
http://www.flipkart.com/item/9788193001837

சிங்கப்பூரில் வாங்க,
http://list.qoo10.sg/item/AVALATHIKAARAM/419615613

மற்ற (இண்டர்நேஷனல்) அனைத்து நாடுகளிலும் வாங்க,
https://www.amazon.com/dp/8193001834

| FREE Home Delivery || Cash on delivery

recover