முதல் ஸ்பரிசம் அது!

முதல் ஸ்பரிசம் அது!

சிரித்தேன் சிரித்தாள்
தொட்டேன் தடுத்தாள்
விட்டேன் அணைத்தாள்!

ஆறாம் அறிவும்
பாழாய்ப் போனது!

நெருங்கினாள் நான்
நொறுங்கினேன்!

இமை வருடினாள் நான்
இதழ்’கள் பருகினேன்!

வேண்டாமென எச்சரித்தாள்
இது போதாதென நச்சரித்தேன்!

காதலும் காமமும்
ஒரு புள்ளியில் சேர்த்துவிட்டாள்!

சம்மதம் கேட்கவில்லை
சங்கடமும் அவளுக்கில்லை!

அகம் புறம் எங்கெங்கும்
முத்தமிட்டு சிலிர்க்கவைத்தாள்!
அகவை அது மறந்து
நித்தம் நித்தம்
தேகம் துளிர்க்கவைத்தேன்!

வெட்கத்தில் முகம் மலர்ந்தாள்!
சொர்க்கத்தை நானும் கண்டேன்
பக்கத்தில் அவளும் இருந்தாள்!

மடியினிலே சில நேரம்
மார்பினிலே சில நேரம்
முதுகோடு சில நேரம்
மூர்ச்சையானேன் அந்நேரம்!
ஆகா, மோச்சமானேன் எந்நாளும்!

அச்சம் அது மறந்து
மிச்சமின்றி அள்ளிக்கொடுத்தாள்
சொச்சமும் ருசித்துவிட்டு
மச்சம் கூட சிவக்க வைத்தேன்!

மலராக மாறிவிட்டாள்
மகரந்தம் நானும் கொண்டேன்!

சிலையாகி அவள் கிடந்தாள்
செதுக்கும் போதே சிற்பியானேன்!

நாணத்தில் தலைகுனிந்தாள்
நானும் அதில் பாதி அடைந்தேன்!

#அவளதிகாரம்

Get a copy of Book now,

இந்தியாவில் வாங்க,
http://www.flipkart.com/item/9788193001837

சிங்கப்பூரில் வாங்க,
http://list.qoo10.sg/item/AVALATHIKAARAM/419615613

மற்ற (இண்டர்நேஷனல்) அனைத்து நாடுகளிலும் வாங்க,
https://www.amazon.com/dp/8193001834

| FREE Home Delivery || Cash on delivery

MUthal Sparisam