நாங்கள் மனிதர்கள்

குழந்தையாய் தான் பிறந்தோம்
சந்தேகப்படாதீர்!

மழலை ரசித்தார்கள்
மானெனக் கொஞ்சினார்கள்
மாமன் மகளுக்கும் அச்சாரம் போட்டார்கள்!
குழந்தையாய்க் குறை தீர்த்ததால்
குலதெய்வம் மறந்தார்கள்!

பால்ய வயதுவரை
பாசத்தில் நனைந்திருந்தோம்
பதின்மம் தொடங்கையில் தான்
பருவம் பொய்த்துவிட்டது!

உடலும் உள்ளமும்
எதிர்திரே இழுக்கும் போது
எங்கள் வண்டி ஓடுவதில்லை

அரைவேக்காடாய் ஜனித்துவிட்டதால்
ஆயுள் முழுதும்
வெந்துகொண்டிருக்கிறோம்

வயிற்றைக் கழுவத்தான்
வாயில்கூட புணர்தல் கொண்டோம்.
துரும்பில் கூட இருக்கும் கடவுள்
அன்று அந்தக் கட்டதில் காலில் கூட இருந்திருப்பானோ!
குமட்டில் இரங்கும்போது – என்
உமட்டல் பார்த்து கூனியிருப்பானோ!

இது வேண்டுதல் இல்லா
பிரம்மசாரம்
வெறுத்தாலும் விடுவதில்லை அந்த
விபச்சாரம்

ஹார்மோன் செய்த கலகத்தினால்
வெறும் காட்சிபொருளாய்
மாறிப்போனோம்
கற்பனையில் கூட
ஒப்பனை செய்தே வாழ
பழகிப்போனோம்.

அங்கிகாரம் கிடைத்திடவே கூடுதல்
அரிதாரம் பூசுகின்றோம்
இந்த அவதாரம் பூர்த்திசெய்ய
உங்கள் பரிதாபம் கூட வேண்டாம்
எம்மை பரிகாசம் செய்ய வேண்டாம்!

முப்பது நொடியில் முடிந்துவிடும் – உங்கள்
மூன்றாம் பால் வேட்கைக்கு
மூன்றாம் பாலினமும் வேட்டை ஆகுதடா!

இந்த பாவத்தில் பங்கு இருப்பதானால்
உங்கள் கடவுளையும் சபிக்கும்
வரம் பெற்றவர்களடா
நாங்கள்.

என் தேகம் பார்த்து
சந்தேகப்படாதீர்!
குழந்தையாய் தான் பிறந்தோம்
நாங்கள் மனிதர்கள் தான்
நீங்கள்?

#அவளதிகாரம்

Get a copy of Book now,

இந்தியாவில் வாங்க,
www.flipkart.com || www.amazon.in

சிங்கப்பூரில் வாங்க,
www.list.qoo10.sg

மற்ற (இண்டர்நேஷனல்) அனைத்து நாடுகளிலும் வாங்க,
www.noolulagam.com

Search: avalathikaaram
Buy / Gift Now

Event P copy