யாழினி என் யாவும் நீ!

யாழினி
என் யாவும் நீ!
என் பாதி நீ!
என் ஆவி நீ!
என் சந்தோழத்தின் சாவியும் நீ!

இரண்டு வருட வயதில்
இருநூறு வருட
அனுபவத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்த
அதிசய பிறவி நீ!

விழலுக்கு வீணாய்போன பேரன்பில்
விளைந்த விருட்சம் நீ!

என் கைக்குள் ரேகையும் நீ
என் கண்ணுக்குள் காட்சியும் நீ
என் கற்பனைகளின் நீட்சியும் நீ
என்னை ஆளுகின்ற மனசாட்சியும் நீ!

நீ கிறுக்கி வைத்த சுவரின் கோடுகள் எல்லாம்
இன்று சித்திரமாய் ரசிக்கிறேனடி!

நிழற்படங்களை பார்க்கும் போதெல்லாம்
நிஜங்களை நான் மறக்குறேண்டி!

மீண்டும் என் கைகளில் வருவாயோ
மீட்டு எனை மீண்டும் தருவாயோ!

‪#‎மகளதிகாரம்‬