அவளழகு!

அவள் கொண்ட முகமழகு
அதைவிட
நான் கண்ட அகமழகு!

வெட்டாமல் வளர்ந்து விட்ட நகமழகு
அதைவிட
பெண்களுக்குள் அவளின் தனி ரகமழகு!

வெகுளியா பேசுகின்ற மொழியழகு
அதைவிட
விவரத்தை வெட்கத்தில் புதைத்தாலும் கசிந்துவிடும் விழியழகு!

விரல் கோர்த்து நடக்கும் போது வழியழகு
அதைவிட
விரல்மட்டும் தொட்டதனால் அத்தனையும் என்மேல் போட்டுவிடும் பழியழகு!

அவளோடு இருக்கின்ற இனிமையழகு
அதைவிட
அவள் நினைவுகளில் கழிக்கின்ற என் தனிமையழகு!

என்னாலே மலருகின்ற சிரிப்பழகு
அதைவிட
நான் பார்க்குமுன்னே துடைக்கின்ற கண்ணீரழகு!

ஆகாயமழகு பூமியுமழகு
அதைவிட
அவளோடிருக்கையிலே அமாவாசை நிலவும் அப்படியோர் பேரழகு!

காரணமில்லாமல் எனை திட்டிக்கொள்வதழகு
அதைவிட
காரியம் முடிந்தபின் எனை கட்டிக்கொள்வதழகு!

#பக்கம் 84
#அவளதிகாரம்

Get a copy of Book now,

இந்தியாவில் வாங்க,
www.flipkart.com

சிங்கப்பூரில் வாங்க,
www.list.qoo10.sg

மற்ற (இண்டர்நேஷனல்) அனைத்து நாடுகளிலும் வாங்க,
/www.amazon.com

Search: avalathikaaram
Buy / Gift Now

58